சமந்தாவின் முன்னாள் கணவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. இதுதான் காரணம்
நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார்.
இருவரது பிரிவுக்கும் என்ன காரணம் என வெளிப்படையாக அவர்கள் கூறவில்லை. இருப்பினும் நாக சைதன்யா வேறு நடிகையுடன் தொடர்பில் இருந்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என அப்போதே இணையத்தில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டது.
நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அப்போதே வெளியானது இந்த சர்ச்சையை இன்னும் பெரிதாக மாற்றியது.
மேலும் சோபிதா - நாக சைதன்யா திருமணமும் கடந்த வருடம் நடந்த முடிந்தது. அதன் பிறகும் அவர்கள் மீது ட்ரோல்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
முதலில் காதலை சொன்னது..
இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஒரு இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அதில் காதலை முதலில் யார் சொன்னது என கேள்வி கேட்டதற்கு 'நாக சைதன்யா தான்' என சோபிதா தெரிவித்திருக்கிறார்.
"With Pleasure" என நாக சைதன்யாவும் அதை உறுதி செய்தார்.
சமந்தா உடன் இருக்கும்போது அவர் இப்படி செய்திருக்கிறார் என நெட்டுசன்கள் கடுமையாக தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
