ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாக சைதன்யாவின் தண்டேல் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
தண்டேல்
நாக சைத்தன்யா-சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் லவ் ஸ்டோரி. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற இந்த ஜோடி ஹிட் ஜோடியாக கொண்டாடப்பட்டது.
அதை தொடர்ந்து, இந்த ஜோடி தண்டேல் என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். சண்டூ மொண்டேட்டி இயக்கத்தில் உருவான இப்படத்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு காதல் படமாக உருவாக்கப்பட்ட இப்படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
OTT ரிலீஸ்
இந்நிலையில், தண்டேல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் மார்ச் 14 - ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.