நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
நாக சைத்தன்யா
தெலுங்கில் டாப் நடிகரான நாகார்ஜுனாவின் மகன் என்ற அடையாளத்தோடு தெலுங்கு சினிமாவில் 2009ம் ஆண்டு ஜோஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாக சைத்தன்யா.
அதன்பிறகு கௌதம் மேனன் ஹிட் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவான நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார், இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.
பின் தொடர்ந்து மனம், மஜிலி போன்ற படங்களில் சமந்தா-நாக சைத்தன்யா இணைந்து நடிக்க காதலும் வந்தது, 2017ம் ஆண்டு திருமணமும் நடந்தது. நன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சொத்து மதிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகன் தான் நாக சைத்தன்யா.
நாகர்ஜுனாவிற்கு ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாம். அவரது மகன் நாக சைத்தன்யாவிற்கு ரூ. 154 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.