நாக சைதன்யா - சோபிதா காதல் தொடங்கியது இப்படித்தான்! அப்போ வதந்திகள் எல்லாம் உண்மைதானா
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சமீபத்தில் அவரது புது காதலி சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
முதல் சந்திப்பு
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பேட்டி கொடுத்து இருக்கின்றனர். தனது காதல் கதை நாக சைதன்யா உடன் எப்படி தொடங்கியது என கூறி இருக்கிறார் சோபிதா.
"நாங்கள் முதலில் இன்ஸ்டாகிராமில் தான் பேச தொடங்கினோம். நான் மும்பையில் இருந்தேன், அவர் ஐதராபாத்தில் இருந்தார். சில வாரங்கள் மெசேஜில் பேசிக்கொண்ட பிறகு ஒரு நாள் நாக சைதன்யா என்னுடன் lunch dateக்காக மும்பைக்கு வந்தார்."
"என்னை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு மணி நேரம் விமானத்தில் பறந்து வந்தார்" என சோபிதா கூற, "எனக்கு text செய்வது பிடிக்காது. சோசியல் மீடியாவில் பேசிக்கொள்வதும் எனக்கு சுத்தமாக பிடிக்காது" என நாக சைதன்யாவும் கூறி உள்ளார்.
காதல் தொடங்கியது எப்படி
அதன் பின் ஒரு வாரம் கழித்து நாங்கள் அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்டோம். நான் Made in Heaven தொடருக்காக சென்றேன், நாக சைதன்யா Dhootha வெப் சீரிஸ்காக வந்திருந்தார்.
"அப்போது தொடங்கி எங்கள் காதல் எப்படி வளர்ந்தது என எல்லோருக்கும் தெரிந்தது தான். அதன் பின் கர்நாடகாவின் Bandipur National Parkக்கு ஒன்றாக ட்ரிப் சென்றோம்" என சோபிதா கூறி உள்ளார்.
மேலும் சோபிதா பிறந்தநாளை கொண்டாட லண்டன் சென்றாராம் நாக சைதன்யா. அதன் பின் 2023 புத்தாண்டுக்கு முந்தைய நாள் சோபிதா அக்கினேனி குடும்பத்தை சந்தித்து காதல் பற்றி கூறினார்கலாம். அதை தொடர்ந்து சோபிதா குடும்பத்தில் சென்று நாக சைதன்யா பேசி இருக்கிறார்.
இப்படி தான் அவர்கள் திருமணமும் நிச்சயமாகி நடந்து முடிந்திருக்கிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
