மனைவி சோபிதாவுடன் நடிக்கப்போகிறாரா நாகசைதன்யா? ஆனால்
நாகசைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நடிகர் நாகசைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
மனைவியுடன் திரையில் இணையும் நாகசைதன்யா
இதன்பின் நடிகை சோபிதாவை காதலித்து வந்த நாகசைதன்யா, கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நடிகர் நாகசைதன்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனைவி சோபிதாவுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள தண்டல் திரைப்படம் வருகிற 7ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நாகசைதன்யா, நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் கண்டிப்பாக தனது மனைவி சோபிதாவுடன் இணைந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.