எனக்கென்ன வயசாகிடுச்சா.. 19 வயது நடிகையிடம் கேட்ட நாக சைதன்யா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நாக சைதன்யா
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா விவாகரத்துக்கு பிறகு மற்றொரு நடிகையை காதலித்து வருகிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதை அவர்கள் அதுபற்றி வாய்திறக்கவில்லை.
மறுபுறம் நாக சைதன்யா படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் NC 22 படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

எனக்கென்ன வயசாகிடுச்சா..
தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி ட்விட்டரில் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருந்தார். அதில் மரியாதைக்காக அவர் காரு என குறிப்பிட்டு இருந்தார்.
அதற்க்கு பதில் அளித்த நாக சைதன்யா 'எதற்காக காரு என சேர்க்குறீங்க, எனக்கென்ன வயசாகிடுச்சுனு நினைக்கிறீங்களா' என கேட்டிருக்கிறார்.
இதற்காக நாக சைதன்யாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவரை uncle என குறிப்பிட்டு எல்லோரும் ட்ரோல் செய்திருக்கிறார்கள்.
Thank you so much krithi !! Why you adding the garu ?? Because I’m growing older ??
— chaitanya akkineni (@chay_akkineni) November 24, 2022
காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து சரக்கடித்த ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்