திருமண நாள் அன்று நாக சைத்தன்யா அணிந்திருந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?
நாக சைத்தன்யா
தமிழ் சினிமா ரசிகர்கள் பல்லாவரத்து பொண்ணு என பெருமையாக கொண்டாடும் நடிகை சமந்தா.
இவரது கணவர் என தமிழ் சினிமா மக்களிடம் அறியப்பட்டவர் தான் நாக சைத்தன்யா. இப்போது இருவரும் பிரிந்துவிட்டார்கள், அவரவர் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சமந்தா தனது சினிமா பயணத்தில் அதிக ஆர்வம் காட்டி வர நாக சைத்தன்யா மறுமணமும் செய்துவிட்டார்.
வாட்ச் விலை
நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவிற்கு டிசம்பர் 4ம் தேதி படு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
குடும்ப பாரம்பரிய முறைப்படி 8 மணிநேரம் நடந்த பூஜைக்கு பின்னர் சோபிதா கழுத்தில் தாலி கட்டினார் நாக சைத்தன்யா. திருமண புகைப்படங்கள் வெளியாக சோபிதா நகை மற்றும் புடவை பற்றி நிறைய பேசப்பட்டது.
இந்த நிலையில் நாக சைத்தன்யா தனது திருமணத்தின் போது கையில் கட்டியிருந்த வாட்ச் விலை தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
நாக சைத்தன்யா அணிந்த Patek Philippe வாட்ச் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 68 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. வரி உட்பட ரூ. 70 லட்சம் செலவு செய்து வாங்கப்பட்டுள்ளதாம்.