சமந்தாவுக்கு போட்டியாக நாக சைதன்யா செய்யும் விஷயம்! விவாகரத்து காரணம் வெளிவருமா?

By Parthiban.A Aug 20, 2022 04:45 PM GMT
Report

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தனர். அவர்கள் சட்டப்படி விவாகரத்தும் பெறுகின்றனர்.

சமந்தா

 ஊ அண்டவா பாடல் ஹிட் ஆன பிறகு சமந்தா இந்தியாவில் அதிகம் பாப்புலர் ஆன நடிகை ஆகி விட்டார். அதற்காக அவரை காபி வித் கரண் ஷோவில் அழைத்து பேட்டி எடுத்து இருந்தார் இயக்குனர் கரண் ஜோகர்.

அந்த ஷோவில் இனி காதல் எப்போதும் வரவே வராது என சமந்தா கூறி இருந்தார், மேலும் நாக சைதன்யா மீது hard feelings தற்போதும் இருக்கிறது என கசப்பான விஷயங்களை பேசினார். ஆனால் விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.

சமந்தாவுக்கு போட்டியாக நாக சைதன்யா செய்யும் விஷயம்! விவாகரத்து காரணம் வெளிவருமா? | Naga Chaitanya Wish For Koffee With Karan

நாக சைதன்யா ஆசை

இந்நிலையில் நாக சைதன்யா அளித்த ஒரு பேட்டியில் தனக்கும் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்க ஆசை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

அது பற்றி கரண் ஜோகரிடம் கேட்டதற்கு "கண்டிப்பாக.. அவரை இந்த ஷோவில் மகிழ்ச்சியாக வரவேற்பேன். அவர் சிறப்பான நடிகர். அவரது அப்பா நாகர்ஜுனாவுக்கு நான் ஒரு பெரிய ரசிகன். அதனால் நாக சைதன்யாவை பேட்டி எடுக்க விரும்புகிறேன்" என தெரிவித்து உள்ளார்.

நாக சைதன்யா காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றால் விவாகரத்துக்கான காரணம் பற்றி வெளிப்படையாக பேசுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

சமந்தாவுக்கு போட்டியாக நாக சைதன்யா செய்யும் விஷயம்! விவாகரத்து காரணம் வெளிவருமா? | Naga Chaitanya Wish For Koffee With Karan

குக் வித் கோமாளி சிவாங்கி வெளிநாட்டில் செய்த காரியத்தை பாருங்க! 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US