இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகையின் முன்னாள் கணவர் யார் என்று தெரிகிறதா?
அந்த புகைப்படத்தில் இருப்பது வேறுயாருமில்லை நடிகர் நாக சைதன்யா தான், இவரின் தந்தை நாகார்ஜுனாவின் முதல் மனைவி லக்ஷ்மிக்கு பிறந்தவர் நாக சைதன்யா.
இவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் ஆனது, அவர்களின் ஐந்து வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும் தற்போது இருவரும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அந்த அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
