ஷோபிதாவுடன் விரைவில் திருமணம்.. சமந்தாவுடனான அந்த புகைப்படத்தையும் நீக்கிய நாக சைதன்யா
நாக சைதன்யா
நடிகர் நாக சைதன்யா முன்னணி நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் ஷோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். சமீபத்தில், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
நிச்சயதார்த்தத்துக்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். சமீபத்தில், இருவரும் பார்ட்டி ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படத்தை நாக சைதன்யா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும்,ஷோபிதா வீட்டில் கோதுமை மஞ்சள் இடிக்கும் திருமண சடங்கு அரங்கேறியது. அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
புகைப்படம்
விவாகரத்திற்கு பின் சமந்தாவுடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய நாக சைதன்யா சமந்தாவுடன் ரேஸ் டிராக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் நீக்காமல் வைத்திருந்தார்.

லப்பர் பந்து நடிகைக்கும் அண்ணா சீரியல் நடிகருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.. யாரு பாருங்க, அழகிய ஜோடி
தற்போது, அந்த புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். சோபிதாவுடன் நாக சைதன்யாவுக்கு நிச்சயம் முடிந்த போது கூட சமந்தாவுடனான அந்த புகைப்படத்தை அவர் நீக்காமல் இருந்தார்.
ஆனால், சமந்தா ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை நீக்குமாறு நாக சைதன்யாவின் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் செய்து வந்த நிலையில் அந்த போட்டோவை தற்போது நீக்கியுள்ளார்.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
