விஜய்யுடன் முன்னாள் மனைவி சமந்தா செய்த ரொமான்ஸ்.. பார்க்க முடியாமல் எழுந்துபோன நாகசைதன்யா
சமந்தா - நாகசைதன்யா
நடிகை சமந்தா - நடிகர் நாகசைதன்யா காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நட்சத்திர ஜோடி தங்களுடைய பிரிவை அறிவித்தனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் பிரிந்துவிட்டார் என கூறப்படுகிறது. விவாகரத்துக்கு பின் இருவருமே தங்களுடைய திரை துறையில் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்கள்.
அப்படி சமந்தாவின் நடிப்பில் உருவாகி இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் தான் குஷி. சமந்தா - விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் இருவருக்கும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் இருந்தது. அதை நாம் டிரைலரில் பார்த்து இருந்தோம்.
எழுந்துபோன நாகசைதன்யா
இந்நிலையில், நடிகர் நாகசைதன்யா பாய்ஸ் ஹாஸ்டல் எனும் படத்தை திரையரங்கில் பார்க்க சென்றுள்ளார். அப்போது இடைவேளை நேரத்தில் சமந்தாவின் குஷி படத்தின் டிரைலர் திரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அதில் வந்த சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து அப்செட் ஆகிவிட்டாராம். படம் பார்க்க வந்த நாகசைதன்யா திரையரங்கில் இருந்து வெளியேறிவிட்டாராம். இந்த சம்பவம் தற்போது தெலுங்கு திரை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ரூ. 34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்திருக்கும் அஜித்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா