மறைக்க எதுவும் இல்லை.. அமலாவுக்கு முன் இந்த பிரபல ஹிந்தி நடிகையை காதலித்தாரா நாகர்ஜுனா
நாகர்ஜுனா
நடிகர் நாகார்ஜூனா தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக ஒருகாலத்தில் இருந்தவர். ஹிந்தியிலும் கூட அவர் நடித்து இருக்கிறார். தற்போது பிரம்மாஸ்திரா படம் மூலமாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து அவர் ஹிந்தியில் நடிக்கிறார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் அவர்.
நாகர்ஜுனா ஹிந்தி நடிகை தபு உடன் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். அவர்கள் காதலில் இருந்ததாக அப்போது கிசுகிசு வந்தது தற்போதைய இளம் தலைமுறையினருக்கு பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக பேசியதே இல்லை.
மறைக்க எதுவும் இல்லை
ஒருமுறை ஒரு பிரபல பத்ரிக்கைக்குக் நாகர்ஜுனா அளித்த பேட்டியில் "தபு என்னுடைய நல்ல பிரெண்ட். நான் 21 அல்லது 22 வயதில் இருந்தபோது அவருக்கு 16 வயது. அப்போது இருந்தே நாங்கள் பிரெண்ட்ஸ். அவரை பற்றி மறைக்க எதுவும் இல்லை. அவர் பெயரை சொன்னாலே என் முகம் பிரகாசம் ஆகும். அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும், அதுஉங்களது பாயிண்ட் ஆஃப் வியூ" என நாகார்ஜூனா தெரிவித்து இருக்கிறார்.
நாகர்ஜுனாவின் மனைவி அமலாவும் தபுவுக்கு தோழி தான். தபு எப்போதாவது ஹைதராபாத் வந்தால் அவர்கள் வீட்டில் தான் தங்குவாராம். நாகர்ஜுனாவின் மனைவி அமலாவும் தபுவுக்கு தோழி தான். தபு எப்போதாவது ஹைதராபாத் வந்தால் அவர்கள் வீட்டில் தான் தங்குவாராம்.
இதுதான் கர்மா.. ரவீந்தர்-மஹாலக்ஷ்மி ஜோடி பற்றி கோபமாக பேசிய வனிதா