பிக் பாஸில் ஆபாசம்.. தொகுப்பாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! ஷோ நிறுத்தப்படுமா?
பிக் பாஸ்
பிக் பாஸ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான சின்னத்திரை ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது. ஹிந்தியில் சல்மான் கான், தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜூனா, கன்னடத்தில் சுதீப், மலையாளத்தில் மோகன்லால் என முண்ணனி நட்சத்திரங்கள் இந்த ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தமிழில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாவது போல தெலுங்கிலும் தற்போது ஆறாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கோர்ட் நோட்டீஸ்
தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் ஆபாசம் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்திருக்கிறார். அது பற்றி விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் தற்போது விளக்கம் அளிக்க நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம், மத்திய அரசு, இரண்டு தெலுங்கு மாநிலங்கள் மற்றும் தொகுப்பாளர் நாகர்ஜுனா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதற்கு அவர்கள் என்ன பதிலளிக்க போகிறார்கள், ஷோ தடை செய்யப்படுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி ! இப்போதே அப்படத்தின் கதை குறித்து இயக்குநர் சொன்ன தகவல்