சமந்தா பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை! நாகர்ஜுனா மறுப்பு
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து தென்னிந்திய சினிமா துறையில் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 4 வருட காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் பிரிவதாக அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி தினமும் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரு செய்தி பரபரப்பாக பரவியது. சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் என்றும், அதன் பின் நாக சைதன்யா வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டார் என்று நாகார்ஜூனா சொன்னதாக செய்தி வெளியானது.
ஆனால் நான் அப்படி சொல்லவே இல்லை என நாகார்ஜுன் மறுத்து இருக்கிறார். "இந்த செய்தி முற்றிலும் பொய்யானது, சுத்த நான்சென்ஸ். வதந்திகளை செய்திகளாக வெளியிட வேண்டாம் என மீடியா நண்பர்களை கேட்டுகொள்கிறேன்" என அவர் கூறி உள்ளார்.
The news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022
I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumours