இத்தனை ஆயிரம் கோடியா.. நாக சைதன்யா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு பாருங்க
நடிகர் நாக சைதன்யா சமந்தாவை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். அவர் நடிகை சோபிதா உடன் காதலில் இருக்கிறார் என்றும் அது தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் அவர்கள் அந்த கிசுகிசு பற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

நாக சைதன்யா குடும்ப சொத்து மதிப்பு
நடிகர் நாக சைதன்யா குடும்பத்துக்கு மொத்தம் சுமார் 4000 கோடி ருபாய் அளவுக்கு சொத்து இருக்கிறதாம். அதில் அப்பா நாகார்ஜூனாவிடம் 3441 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறது.
அவரது அப்பா அக்கினேனி நாகேஸ்வர ராவ் தொடங்கிய அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருந்து தான் அவருக்கு மிகப்பெரிய வருமானம் வருகிறது. அந்த 22 ஏக்கர் ஸ்டூடியோ பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கிறது.
மேலும் மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு நாகார்ஜூனாவுக்கு வீடு மற்றும் நிலங்கள் இருக்கிறதாம்.

திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri