பொன்னியின் செல்வன் vs பாகுபலி.. ஒப்பீடு பற்றி தெலுங்கு நடிகர் கொடுத்த பதிலடி
பொன்னியின் செல்வன் vs பாகுபலி
பொன்னியின் செல்வன் படத்தினை பாகுபலி உடன் ஒப்பிட்டு தான் அதிகம் விமர்சனங்கள் ஆரம்பத்தில் வந்தது. இதற்காக தெலுங்கு சினிமா ரசிகர்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொண்டார்கள் என்றும் சொல்லலாம்.
பாகுபலி அளவுக்கு PS1 இல்லை என தெலுங்கு ரசிகர்கள் விமர்சிக்க, அந்த படத்திலேயே பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து பல காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என தமிழ் சினிமா ரசிகர்கள் பதிலடி கொடுத்தார்கள்.
நாகர்ஜூனா கருத்து
இந்நிலையில் நேற்று தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்து உள்ள Ghost என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பேசிய அவர் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டி பேசினார்.
"பொன்னியின் செல்வன் மிக நன்றாகவே இருந்தது. நான் புத்தகத்தையும் படித்து இருக்கிறேன்" என கூறினார். அதன் பின் செய்தியாளர் ஒருவர் PS 1 மற்றும் பாகுபலி ஒப்பீடு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் சொன்ன அவர் "Dont listen to them" என கூறி இருக்கிறார்.
பாகுபலி சாதனையை முறியடிக்குமா பொன்னியின் செல்வன்.. உலகளவில் இத்தனை கோடி வசூலா

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
