முதல் மகன் திருமணம் ஓவர், நாகர்ஜுனா 2வது மகன் திருமணம் எப்போது?.. வெளிவந்த விவரம்
நாகர்ஜுனா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நாகர்ஜுனா.
65 வயதாகும் இவர் இப்போது இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது முதல் மகன் நாகர்ஜுனாவின் மறுமணம் நடிகை சோபிதாவுடன் கோலாகலமாக நடந்து முடிந்தது.
தற்போது அவரது 2வது மகன் அகிலின் திருமணம் பற்றிய தகவல் வந்துள்ளது.
தேதி
நாகர்ஜுனா மகன் அகிலுக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் வரை சென்றது, ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக திருமணம் நின்றது.
இந்த நிலையில் அகிலுக்கும் ஜெய்னப் என்பவருக்கு சிம்பிளாக உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
தற்போது இவர்களுக்கு வரும் மார்ச் மாதம் 24ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்கான வேலைகளில் குடும்பத்தினர் மும்முரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.