ராயன் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு சிறப்பு விருந்தினராக வரும் சூப்பர் ஸ்டார்.. லேட்டஸ்ட் தகவல்!!
ராயன்
நடிகர் தனுஷ், பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்டார். தற்போது இவர் தனது 50 வது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கெங்ஸ்டர் கதை அம்சத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படம் வருகிற ஜூலை 26 ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிறப்பு விருந்தினர்
இந்நிலையில் ராயன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நாகர்ஜுனா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.