என் மகள் தப்பு செய்யல.. நிஹாரிகா போதை வழக்கில் சிக்கியது பற்றி நாக பாபு வெளியிட்ட வீடியோ
நேற்று அதிகாலையில் ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த ரெய்டில் தெலுங்கு நடிகை நிஹாரிகா கைது செய்யப்பட்டார். அங்கு போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்த கிட்டத்தட்ட 150 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
நிஹாரிகா கைது
கைது செய்யப்பட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட நிஹாரிகா மற்றும் அவரது நண்பர்கள் அதன் பிறகு விடுவிக்கப்பட்டனர். நிஹாரிகா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியில் வரும் போது மீடியாவுக்கு பதில் சொல்லாமல் கூட்ட நெரிசலில் காரில் ஏறி செல்லும் வீடியோ நேற்று முதல் வைரல் ஆகி வருகிறது.
அப்பா நாகபாபு வெளியிட்ட வீடியோ
இந்நிலையில் நிஹாரிகாவின் அப்பா நாக பாபு வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தனது மகள் கைதான சம்பவம் பற்றி பேசி இருக்கிறார்.
"என் மகள் தவறு செய்யவில்லை என உறுதியாகி இருக்கிறது. மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத speculation செய்து செய்தி பரப்ப வேண்டாம்" என கேட்டிருக்கிறார்.
Producer and actor @NagaBabuOffl garu clarified issue of his daughter Niharika garu and asked Media to dont speculate unwanted rumours pic.twitter.com/JZGaqkb3oT
— SKN (Sreenivasa Kumar) (@SKNonline) April 3, 2022