ரஜினியுடன் பிறந்தநாளை கொண்டாடிய மீனாவின் மகள்.. அதுவும் எந்த இடத்தில் தெரியுமா
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் இளம் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மீனா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நைனிகா எனும் அழகிய மகள் உள்ளனர். நைனிகா, தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தேறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்நிலையில் குழந்தை நட்சத்திர நடிகையான நைனிகா, தனது பிறந்தநாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், அண்ணாத்த படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார்.
கடந்த வருடம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை நடிகை மீனா Throwback என்று குறிப்பிட்டு தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri