ஆரம்பமானது சீரியல் நடிகை நக்ஷத்ராவின் திருமண கொண்டாட்டம்- கலக்கலான வீடியோ இதோ
சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் நக்ஷத்ரா. பெரிய ரசிகர்கள் வட்டாரம் வைத்துள்ள இவர் விருது நிகழ்ச்சிகளை கூட தொகுத்து வழங்கி வந்தார்.
இப்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார். சீரியலில் படிப்பு வராத ஒரு பெண்ணாக நடிக்கிறார், இப்போது அவரது திருமண டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு இடையில் நக்ஷத்ரா, ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்று செய்தி வர நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்த நிலையில் நக்ஷத்ரா திருமண கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார். சில தினங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் ப்ரீ திருமண கொண்டாட்டம் நடந்துள்ளது.
கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவரே வெளியிட்டுள்ளார்.