வருங்கால கணவருடன் ரொமான்டிக் செல்பி எடுத்த சீரியல் நடிகை நக்ஷத்திரா.- குவிக்கும் லைக்ஸ்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சன் சிங்கர் நிகழ்ச்சியில் கலகலவென தொகுத்து வழங்கி வந்தவர் தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ்.
இதன்பின் குஷ்பூ நடிப்பில் சுந்தர்.சி தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதுமட்டுமின்றி குடும்ப ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நாயகி சீரியலிலும் சில எபிசோட்கள் நடித்திருந்தார் நக்ஷத்திரா.
சமீபத்தில் தனது காதலரும், வருங்கால கணவருமான ராகவ் என்பவரை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார்.
அதனை தொடர்ந்து நக்ஷத்திராவிற்கும், ராகவிற்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில், தனது வருங்கால கணவருடன் அழகிய ரொமான்டிக் செல்பி எடுத்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நக்ஷத்திரா நாகேஷ்.
இதோ அந்த புகைப்படம்..