சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு நடந்த வளைகாப்பு! வைரல் வீடியோ
யாரடி நீ மோகினி சீரியல் புகழ் நடிகை நக்ஷத்திரா கடந்த வருடம் ஜூலையில் விஷ்வா சாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜீ தமிழில் producer ஆக பணியாற்றி வரும் விஷ்வா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு இரண்டாம் மனைவியாக நக்ஷத்திரா ஒப்புக்கொண்டது ஏன் என அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதற்கு பிறகு கடந்த ஜனவரி மாதத்தில் நக்ஷத்திரா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
வளைகாப்பு
இந்நிலையில் நேற்று நக்ஷத்திராவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்திருக்கிறது. அவரது நெருக்கமான தோழியான கயல் சீரியல் சைத்ரா ரெட்டி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொன்டு இருக்கிறார்.
வீடியோ இதோ
முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி




