அம்மன் வேடம் போட்டு வனிதா இப்படி மோசமாக நடந்துகொண்டார்- வெளிப்படையாக கூறிய பிரபலம்
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வந்து கொண்டிருக்கிறார்.
குக் வித் கோமாளி, பிக்பாஸ், கலக்கப்போவது யாரு, பிபி ஜோடிகள் என தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். ஆனால் பிபி ஜோடிகளில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறினார்.
அங்கு நடந்த பிரச்சனை குறித்து இதுவரை அவர் மட்டுமே பேசி வந்தார்.
தற்போது முதன்முறையாக அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார் நகுல். அவர் கூறுகையில், வனிதாவின் நடனம் குறித்து நாங்கள் தன்மையாக தான் கமெண்ட் கூறினோம்.
அவருக்கு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது பிடிக்கவில்லை. அவரைப் பற்றி பேசக் கூட நான் விரும்பவில்லை.
அம்மன் வேடம் போட்டுக் கொண்டு செட்டில் எங்களைப் பற்றி அவர் அசிங்கமாக பேசியதாக செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை. அவரிடம் வனிதா விஜயகுமார் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
