அட நடிகை தேவயானி மகள்களா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே... பிரபல நடிகருடன் எடுத்த போட்டோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தேவயானி.
அடுத்த வருடமே அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் நடித்தார், அப்படம் அவரின் திரைப்பயணத்திற்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது.
அதன்பின் சரத்குமார் ஜோடியாக சூரியவம்சம், தெனாலி, ப்ரண்ட்ஸ், ஆனந்தம், விண்ணுக்கும் மண்ணுக்கும் என நடித்தார்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும் போது அப்பட இயக்குனர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட குடும்பத்தை எதிர்த்து திருமணமும் செய்துகொண்டார்.

ஜோடியாக மலேசியாவில் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் முத்து-மீனா- வைரலாகும் போட்டோ
அன்ஸீன் போட்டோ
திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தை கொஞ்சம் வளர நடிகை தேவயானி கோலங்கள் சீரியல் நடித்தார், அதில் வெற்றியும் கண்டார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுபுது அர்த்தங்கள் தொடரில் நடித்தார்.
இன்று அவருக்கு பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து கூற தேவயானி சகோதரரும், நடிகருமான நகுல் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை பதிவிட்டு சகோதரிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதில் நடிகை தேவயானி மகள்கள் நன்றாக வளர்ந்து பெரிய பெண்கள் போல் காணப்படுகிறார்கள்.