நடிகர் நகுலின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே - புகைப்படத்துடன் இதோ
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல்.
இப்படத்தை தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழில் அறிமுகமானார்.
மேலும் தற்போது இவர் கைவசம் எரியும் கண்ணாடி, வாசக்கோட காமா உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்துமுடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த பெண் குழந்தைக்கு அகிரா என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளின் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகர் நகுலின் மகளா இது.. நன்றாக வளர்ந்து விட்டாரே.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
