எனக்கு அதே நிலைமை, கூட யாருமே இல்லை, கதறி அழுதேன்.. சோகமான நாட்கள் குறித்து நடிகை நளினி எமோஷ்னல்
நடிகை நளினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நளினி.
1980ம் ஆண்டு திரைக்கு வந்த ஒத்தையடி பாதையிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஆரம்பத்தில் சில படங்கள் நடித்தவர் அதன்பிறகு நிற்கவே நேரம் இல்லாமல் படு பிஸியாக நடித்து வந்தார், அதிகப்படியான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்தவர் இப்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார்.
விவாகரத்து
நளினி-ராமராஜன் இருவரும் திருமணம் செய்ததும் பின் விவாகரத்து பெற்றதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை நளினி கூறுகையில், விவாகரத்திற்கு பிறகு என்னுடைய குழந்தைகளை பாதுகாக்க மிகவும் கஷ்டமாக இருந்தது.
அந்த நேரத்தில் கஷ்டத்தை கூற கூட யாரும் இல்லை, இனி சினிமாவே வேண்டாம் என நான் விலகியிருந்தேன்.
ஆனால் குழந்தைகளுக்காக நான் மீண்டும் நடிக்க வந்தேன், திரும்பவும் ஏன் இதே சூழலை எனக்கு கொடுத்தாய் என தினமும் நான் வணங்கும் கருமாரி அம்மனிடம் முறையிட்டு அழுதிருக்கிறேன்.
இப்போது இந்த நிலையில் இருப்பதற்கும் அந்த கருமாரி அம்மன் தான் காரணம் என்று பல நிகழ்ச்சிகளில் அவர் கூறியிருக்கிறார்.

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
