நடிகை நமிதாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டதா! அதிர்ச்சி தகவலுக்கு பதில் கொடுத்த நடிகை
நமிதா
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து எங்கள் அண்ணா திரைப்படத்தில் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நமிதா. இதற்கு முன் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
டிகன், இங்கிலீஷ்காரன், சாணக்கியா, பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
நடிகை நமிதாவிற்கு 2017ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2022ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்த நிலையில், நடிகை நமிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் தனது கணவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என கிளம்பிய வதந்தி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
விவாகரத்து செய்தி
"திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து எனக்கும் எனது கணவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என செய்திகள் வெளிவந்தது. நானும் என் கணவரும் அதை பார்த்து சிரித்து கொண்டிருந்தோம். மீடியா மற்றும் நண்பர்கள் போன் கான் செய்து விசாரித்தனர்.
அந்த செய்தி வருவதற்கு சில நாட்கள் முன் தான் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன். அந்த புகைப்படத்தில் நானும் என் கணவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக தான் இருந்தோம்.
எப்படி இப்படியொரு விவாகரத்து வதந்திகளை கிளப்பி விடுறாங்கனு தெரியவில்லையே என நினைந்து நானும் என் கணவரும் சிரித்தோம்" என கூறியிருந்தாராம் நடிகை வனிதா.

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
