பிக்பாஸ் 5வது சீசன் பிரபலம் நமீதா மாரிமுத்துவை கொலை செய்ய துணிந்த அவரது நிஜ அம்மா, அப்பா இவர்கள் தானா?- இதோ போட்டோ
பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பம் என்னவோ கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் உடனே பிக்பாஸ் போட்டியாளர்களையும், மக்களையும் சோகப்படுத்தும் விதமாக ஒரு விஷயம் செய்துவிட்டார்.
அதாவது போட்டியாளர் தாங்கள் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையை பற்றி கூற சொல்ல அனைவரும் நிறைய விஷயங்கள் பகிர்ந்தார்கள்.
அதில் நமீதா மாரிமுத்து சொன்ன விஷயம் எல்லோரையும் தேம்பி அழ வைத்துவிட்டது. அவர் திருநங்கை ஆனதால் அவரை கொலை எல்லாம் செய்ய முயற்சித்துள்ளனர் அவரது அம்மா அப்பா.
தற்போது நமீதா மாரிமுத்து சில விஷயங்களால் பிக்பாஸ் 5வது சீசனை விட்டு வெளியேறியிருப்பதாகவும் 2,3 நாட்களில் மீண்டும் விட்டிற்குள் சென்றுவிடுவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நமீதா மாரிமுத்துவை கொலை செய்ய துணிந்த அவரது அம்மா-அப்பாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,