நடிகை நமிதாவின் பள்ளிப்பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அப்பபோதே எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க
விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இதற்கு முன், தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இதன்பின், தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தல அஜித், தளபதி விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
ஆனால், பில்லா படத்திற்கு பிறகு, நடிகை நமிதாவிற்கு ஹிட் படமாக எதுவுமே அமையவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
இதன்பின், நடிகர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.
இந்நிலையில், நடிகை நமிதாவின் பள்ளிவருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், 'அட, நடிகை நமிதாவா இது, பள்ளி பருவத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறார்' என கேட்டு வருகின்றனர்.
இதோ நீங்களே பாருங்க..