ஜெயிலர் படத்தில் நடிக்கவிருந்த தெலுங்கு மாஸ் ஹீரோ! யார் பாருங்க
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த ஜெயிலர் படம் நேற்று முன்தினம், ஆகஸ்ட் 10ம் தேதி, வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி ஓவர்சீஸ் வசூலும் பிரம்மாண்டமாக வந்து கொண்டிருக்கிறது.
தெலுங்கு ஹீரோ
மலையாளத்தில் மோகன்லால், கன்னட சினிமாவில் இருந்து சிவராஜ்குமார் ஆகியோர் நடித்தது போல, ஒரு மாஸ் தெலுங்கு ஹீரோவையும் ஜெயிலர் படத்தில் நடிக்கவைக்க நெல்சன் முயற்சித்து இருக்கிறார்.
நடிகர் பாலகிருஷ்ணா தான் அது. ஆனால் சில காரணங்களால் பாலகிருஷ்ணா நடிக்கவில்லை என நெல்சன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் மாஸ் சண்டை காட்சிகளுக்கு பெயர்பெற்ற பாலகிருஷ்ணா நடித்து இருந்தால் ஜெயிலர் படம் இன்னும் தெலுங்கில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நெல்சனுக்கு போன் செய்த விஜய்! ஜெயிலர் பற்றி என்ன கூறினார் தெரியுமா

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
