நடிகர் பாலகிருஷ்ணா சொத்து விவரம்.. மனைவி, மகன் பெயரில் இத்தனை கோடியா?
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் பாலகிருஷ்ணா. அவரது படங்களில் வரும் மாஸ் சண்டை காட்சிகள் பெரிய அளவில் பேமஸ். நம்பமுடியாத அளவுக்கு இருக்கும் அவரது சண்டை காட்சிகள் தமிழ்நாட்டிலும் பிரபலம் தான்.
மறைந்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்டிஆரின் மகனின் தான் பாலகிருஷ்ணா.
சொத்து மதிப்பு
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. அதில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்புமனுவில் அவரது சொத்து விவரங்களை பாலகிருஷ்ணா குறிப்பிட்டு இருக்கிறார். தன் பெயரில் 81.63 கோடி ருபாய் சொத்தும், மனைவி பெயரில் 140 கோடி ரூபாய் சொத்தும் இருக்கிறதாம்.
மகன் பெயரில் 58.63 கோடி சொத்து இருப்பதாகவும் பாலகிருஷ்ணா குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
