நானும் மனுஷி தான்.. நெட்டிசனின் அந்த மாதிரி கமெண்டுக்கு நந்திதா கோபமான பதில்
நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களையும் விமர்சனங்களையும் சந்திப்பது வழக்கமாக நடக்கும் ஒன்றாகிவிட்டது. நடிகைகள் போட்டோ வெளியிட்டால் அதை வைரலாக்குவார்கள், அல்லது அதில் ஏதாவது குறை இருந்தால் அதை வைத்தே ட்ரோல் செய்வார்கள்.
அப்படி நடிகை நந்திதா ஸ்வேதா சமீபத்தில் வெளியிட்டு இருந்த போட்டோவில் அவர் குண்டான இருப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். ஒரு நபர் நந்திதாவை ஒர்கவுட் செய்து உடலை ஷேப்பில் வைத்துக்கொள்ளும்படி அட்வைஸ் செய்து மெசேஜ் செய்து இருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுத்து இருக்கும் நந்திதா, "நான் ஒன்றும் கடவுள் இல்லை. நானும் மனுஷி தான். நானும் சில விஷயங்களை கடந்து வருகிறேன். எப்படி மக்கள் இது போல எழுதுகிறார்கள். I love my body and I like this phase of my life, and how I look" என தெரிவித்து இருக்கிறார்.