செல்வராகவன், தனுஷின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்..? காரணம் இதுதானா
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.
இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.
தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகி உள்ளது.
அதன்படி, பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தேதியை செல்வராகவன் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும் News Lankasri
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri