பிளாக் டிக்கெட் விற்று சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன்!
விஜய் டிவியில் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பாப்புலர் ஆனவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக அவர் பெண் வேடங்களில் தோன்றி அதிக அளவில் ரசிகர்களை சிரிக்கவைத்தவர் நாஞ்சில் விஜயன்.
அவர் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருவதால் சமீப காலமாக அவரை விஜய் டிவியில் பார்க்க முடிவதில்லை. நாஞ்சில் விஜயன் டிக்டாக் பிரபலம் சூர்யா உடன் ஏற்பட்ட பிரச்சனைக்காக சில மாதங்களுக்கு முன்பு கைதானது குறிப்பிடத்தக்கது.

பிளாக் டிக்கெட்
இந்நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் ஐபிஎல் போட்டி டிக்கெட்டை பிளாக்கில் பல மடங்கு விலைக்கு விற்று இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.
1500 ரூபாய் டிக்கெட்டை அவர் 6500 ரூபாய்க்கு வாட்சப் மூலமாக விற்பனை செய்து இருக்கிறார். இதற்காக நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

மாரடைப்பால் இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதம் சிறை! அதிர்ச்சி தீர்ப்பு