மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI.. வெளிவந்த உண்மை
ரோபோ ஷங்கர்
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ ஷங்கர், கடந்த 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் கொடுத்தது. திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் ரோபோ ஷங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். குறிப்பாக ரோபோ ஷங்கர் கடவுளாக பார்க்கும் நடிகர் கமல் ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது, ரோபோ ஷங்கரின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என பலரும் கூறினார்கள்.
இந்திரஜா ஷங்கர்
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர் சமீபகாலமாக செய்யும் ப்ரோமோஷன் வீடியோ செய்து வருவது சர்ச்சைக்குள்ளானது. இதனை பலரும் விமர்சித்து பேசினார்கள். இந்நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் ரோபோ ஷங்கரின் நண்பரும், விஜய் டிவி பிரபலமுமான நாஞ்சில் விஜயன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: "ரோபோ ஷங்கருக்கு வருமானம் குறைந்ததால், வீட்டுக்கு மாதம் EMI ரூ. 1.5 லட்சத்தை அவருடைய மகள் கட்டி வருகிறார். இதனால்தான் அவர் வருமானத்திற்காக பல ப்ரோமோஷன்கள் செய்கிறார். இதை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை" என நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார்.