தனது கணவரை கண் கலங்க வைத்த மைனா நந்தினி, காதலர் தின ஸ்பெஷலாக அவர்கள் பதிவிட்ட வீடியோ..

Actress Husband Nandhini Maina cries
By Balakumar Feb 17, 2021 04:00 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் தான் சரவணன் மீனாட்சி, இந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை நந்தினி.

அதனை தொடர்ந்து இவர் ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவருக்கும் சீரியல் நடிகர் யோகேஸ்வரனுக்கும் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு துருவன் என்று பெயரிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் யூடியூப் சேனலில் யோகேஸ்வரன் நடிகை நந்தினிக்கு காதலர் தின சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளார்.  

அதில் வரிசையாக கிப்ட் கொடுத்து வந்த யோகேஸ்வரன் தனது நெஞ்சில் மனைவியின் பெயரை பச்சைக் குத்தியிருப்பதையும் காட்டுகிறார். அதைப்பார்த்த மைனா நந்தினி அன்பில் உறைந்து போக யோகேஸ்வரன் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US