விஜய்யை தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த நெப்போலியன்
நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் பணிகள் பணம் இல்லாத காரணத்தால் நின்று இருந்தது. அதனை தொடர்ந்து விஜய் ஒரு கோடி ரூபாயும், கமல் ஒரு கோடி ரூபாயும் அளித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ருபாய் வழங்கினார். தற்போது கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நெப்போலியன்
இந்நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி ருபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி கூறி இருக்கிறது.
நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி பல நூறு ஏக்கரில் விவசாயமும் அங்கு செய்து வருகிறார்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu