நெப்போலியன் மகன் தனுஷ், மருமகள் அக்ஷ்யா திருமணத்திற்கு பின் எங்கு சென்றுள்ளனர் பாருங்க.. வைரல் வீடியோ

Bhavya
in பிரபலங்கள்Report this article
நெப்போலியன்
பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகர்களில் ஒருவர் தான் நடிகர் நெப்போலியன். அரசியல் சினிமா என மிகவும் பிரபலமாக வலம் வந்த இவர் அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட உடல் நிலை குறைவால் அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
தற்போது, இவருடைய மூத்த மகன் தனுஷ் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார் நெப்போலியன்.
தனுஷ்-அக்ஷ்யா திருமணத்திற்கு சரத்குமார், ராதிகா, குஷ்பு, மீனா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், திருமணம் நடந்து முடிந்த நிலையில், தனுஷ் மற்றும் அக்ஷ்யா இருவரையும் வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.