43 வருடங்களுக்கு முன்பே காபி குடிப்பதை நிறுத்திய நெப்போலியன்.. என்ன காரணம் தெரியுமா?
நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் என்று நினைத்ததுமே முதலில் நியாபகம் வருவது உயரம், கம்பீரமாக முறுக்கும் மீசை, வாட்டசாட்டமான ஒரு பிரபலம்.
சினிமா, அரசியல் என வலம் வந்த நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார்.
சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷிற்கு கோலாகலமாக ஜப்பானில் திருமணம் செய்து முடித்துள்ளார் நெப்போலியன்.
நடிகரின் பேட்டி
நான் 18 வயதாக இருந்த போதே என் அம்மா கேன்சர் வந்து இறந்துவிட்டார்கள். என் அம்மாவிற்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் அவருக்கு பிடித்த காபியை விட்டுவிட்டேன்.
அன்று அம்மா இறந்தநாள் முதல் இன்று வரை சுமார் 43 ஆண்டுகளாக நான் காபி சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன். எனது வளர்ச்சியை என் அம்மா பார்க்க இல்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
