சிவகார்த்திகேயன் மீது பொறாமை.. பதிலடி கொடுத்த நடிகர் நெப்போலியன்
சிவகார்த்திகேயன்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 31 -ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியாகவுள்ளது. தற்போது, படக்குழுவினர் மற்றும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படம் வெளியாக ஒரு வாரமே உள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயன் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
நெப்போலியன் கருத்து
அதில், " மிகவும் கஷ்டப்பட்டு சினிமா மேல் உள்ள ஆசையால் கடினமாக உழைத்து முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அதற்காக, அவரை பாராட்ட வேண்டும்.

மேலும், சினிமாவில் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே வைத்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமை படுவது அல்லது அவர் குறித்து இழிவாக பேசுவது சரியில்லை" என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri