லியோ 'நா ரெடி தான் வரவா' பாடலை பாடிய பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ..
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் இதுவரை ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்துள்ளது என கூறப்படுகிறது.
லியோ பாடல்
மேலும் லியோ படத்தின் இரண்டாவது பாடல் இந்த வாரம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாடல் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பிய நிலையில், அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த மாதம் இறுதியில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்குமுன் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோவின் முதல் பாடல், 'நா ரெடி தான் வரவா' எவ்வளவு பெரிய ஹிட்டாகியுள்ளது என்பதை நாம் அறிவோம்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், 'நா ரெடி தான் வரவா' பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த ரசிகர் ஒருவர் அதை சாத்தியப்படுத்தியும் காட்டியுள்ளார்.
AI மூலம் 'நா ரெடி தான் வரவா' பாடலை மோடியின் குரலை வைத்து மிக்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Tow Towdan Tow ???
— Karthik Ravivarma (@Karthikravivarm) September 12, 2023
pic.twitter.com/0tQz4bzKe5

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
