நாரி நாரி நடும முராரி: திரை விமர்சனம்
ஷர்வானந்த், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள நாரி நாரி நடும முராரி தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

கதைக்களம்
கெளதம் (ஷர்வானந்த்) வழக்கறிஞர் ராமலிங்கையாவின் (சம்பத்) மகள் நித்யாவை (சாக்ஷி) காதலிக்கிறார். இந்த விஷயம் ராமலிங்கையாவிற்கு தெரிய வர கௌதமை அழைத்து அவரது காதல் கதையை கேட்கிறார்.
அது ஆத்மாத்தமாக இருக்கும்பட்சத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறுகிறார். கௌதமும் காதல் பிளாஷ்பேக்கை சொல்லி முடிக்க ஒரு சின்ன சண்டை கூட இல்லாத காதல் திருமணத்தில் முடிந்தால் விரைவாக விவகாரத்திற்கு சென்றுவிடும் எனக் கூறி, கௌதம், நித்யா காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார் ராமலிங்கையா.

பின்னர் நித்யா அவரை சமாதானப்படுத்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ராமலிங்கையா, எளிமையாக பதிவாளர் அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்கிறார். அப்போதுதான் கல்லூரி காலத்தில் தியாவை பதிவுத் திருமணம் செய்ததை தன் அப்பாவிடம் கூறுகிறார் கௌதம்.
அதன் பின் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் கௌதம் அங்கு அதிகாரியாக இருக்கும் சுனிலைப் பார்த்து அதிர்ச்சியடைய, எப்படி அவர் சாக்ஷியை திருமணம் செய்தார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
காமெடி கலாட்டா கதையில் ஷர்வானந்த் கலக்கியிருக்கிறார். வசன உச்சரிப்பு, டைமிங் கவுன்டர்; அதற்கேற்ப ரியாக்ஷன் என படம் முழுக்க எண்டர்டெயின் செய்கிறார். அவருடன் அப்பா கேரக்டரில் நரேஷும் சேர்ந்துகொள்ள திரையரங்கில் சிரிப்பலைதான். குறிப்பாக தன்னுடைய விவகாரத்தை அப்பாவுடைய விவாகரத்து என்று கூறி ஷர்வானந்த் செய்யும் கோல்மால் எல்லாம் அட்டகாசம்.
இளையராஜா பாடலை ரீல்ஸ் செய்தால் காப்பிரைட்ஸ் கேட்பார், சனிக்கிழமை நான் சண்டை போட மாட்டேன், பாலகிருஷ்ணாவின் நாரி நாரி நடும முராரி பாடலை பாடுவது, இந்தியா என டாட்டூ போடுவது என பல அட்ரசிட்ஸ் செய்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர் ராம் அப்பராஜு.

அழகு பதுமையாக வரும் சாக்ஷி ஓரளவு நடிக்க முயற்சிக்க, சம்யுக்தா இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்துவிடுகிறார். சம்பத், நரேஷ் காம்போ கலகலப்பூட்ட, வெண்ணிலா கிஷோர் தனியாக ஸ்கோர் செய்ய சுனிலும் சேர்ந்துகொள்ள காமெடி கலவரம்தான் இரண்டாம்பாதி.
சீரியஸான கதையை எடுத்துக் கொண்டு காமெடியான ட்ரீட்மெண்ட் நிறைவாக படத்தை முடித்து வைக்கிறார் இயக்குநர். பதிவுத்திருமணம் செய்தால் விவாகரத்து பெற வேண்டும் என்ற சட்டம் கூட தெரியாமல் ஹீரோ இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அது மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக். என்றாலும் காமெடி காட்சிகள் லாஜிக் மீறல்களை மறைக்க உதவியிருக்கின்றன. விஷால் சந்திரசேகரின் இசை, நந்துவின் வசனங்கள், ஞானசேகர் மற்றும் யுவராஜின் ஒளிப்பதிவு என அனைத்தும் கச்சிதம். இந்த சங்கராந்தி ரேஸில் ஷர்வானந்தும் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறலாம்.
க்ளாப்ஸ்
நடிகர்கள்
திரைக்கதை
காமெடி
வசனம்
பல்ப்ஸ்
ஒரு சில லாஜிக் குறைகள்
மொத்தத்தில் இந்த நாரி நாரி நடும முராரி குடும்பத்துடன் வயிறு குலுங்க சிரித்து மகிழக்கூடிய காமெடி ஜானர்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri