காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருட்டு.. தேசிய விருதை தூக்கி சென்றது யார்?
காக்கா முட்டை படத்திற்காக பெரிய அளவில் பேசப்பட்டவர் இயக்குனர் மணிகண்டன். அந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
அதன் பிறகு குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார் அவர். கடைசி விவசாயி படத்திற்காக மணிகண்டனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் திருட்டு
இயக்குனர் மணிகண்டன் அவரது அடுத்த படத்தின் பணிகளுக்காக சென்னையில் குடும்பத்துடன் இருக்கும் நிலையில் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி எழில் நகரில் இருக்கும் வீடு பூட்டி இருந்திருக்கிறது.
அந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர். மணிகண்டனின் இரண்டு தேசிய விருது பதக்கங்கள், 5 சவரன் நகைகள், 1 லட்சம் பணம் ஆகியவை திருடு போயிருக்கிறது.
போலீசில் புகார் அளிக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.