தேசிய விருது வென்ற இயக்குனரின் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி வரிசையாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் அடுத்து வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள மேலும் ஒரு திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் சேதுபதி மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர்கள் மூன்றாவது கூட்டணி அமைக்கும் திரைப்படம் கிராமப்புற ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri