வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா! யார் தெரியுமா?
அனுஷ்கா ஷெட்டிக்கு தற்போது நாற்பது வயதாகிறது. அவர் உடல் எடை குறைப்பதற்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலையில் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் அதிகம் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார் அவர். உடல் எடை கூடிக்கொண்டே இருந்ததால் அவருக்கு படவாய்ப்புகள் வராமல் போனது என்றும் சொல்லலாம்.
தற்போதுஅவர் ஒரு புது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். மகேஷ் பாபு என்று இயக்குனர் இயக்கும் இந்த படத்தை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிக்க இருக்கிறார். அது பற்றிய அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வந்திருக்கிறது. அனுஷ்காவை விட அவர் எட்டு வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக மூத்த நடிகர்களுக்கு டீனேஜ் நடிகைகள் ஜோடியாக நடிப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். தற்போது வயது வித்யாசம் ரிவர்ஸில் நடந்திருப்பது பற்றி நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.