சீரியல் நடிகர் நவீன்-செய்தி வாசிப்பாளர் கண்மணி நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய புகைப்படங்கள்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நவீன்-பிந்து ஜோடி ரசிகர்களிடம் படு பிரபலம்.
காதலை சொன்ன நவீன்
இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று பார்த்தால் நவீன் வேறொருவரை காதலிப்பதாக அறிவித்தார். அவர் வேறுயாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் கண்மணியை தான் நவீன் காதலித்துள்ளார்.
இருவரும் காதலிப்பதை அண்மையில் தான் கூறினார்கள், அதன்பிறகு ஒரு விருது நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.
காதலை சொன்ன இவர்களிடம் அடுத்து எப்போது திருமணம் என ரசிகர்களால் அதிகம் கேட்கப்பட்டது.
நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்
இந்த நிலையில் நவீன்-கண்மணி ஜோடிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.