புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்.. என்ன தொடர்

Yathrika
in தொலைக்காட்சிReport this article
விஜய் டிவி
விஜய் டிவியில் மிகவும் ஹிட்டாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என நிறைய தொடர்களுக்கு மக்களும் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அப்படி சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி வெற்றிகரமாக தொடங்கப்பட்ட ஒரு தொடர் தமிழும் சரஸ்வதியும்.
வெயிட்டான இரண்டு கதாபாத்திரத்தை முன்வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் பின் கதையே மாறி அண்மையில் முடிந்தும்விட்டது.
புதிய தொடர்
இந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தவர் நவீன் வெற்றி. கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவருக்கு இப்போது புதிய தொடர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாக இருக்கும் கண்மணி அன்போடு என்ற புதிய தொடரில் நடிக்க இருக்கிறாராம். மற்றபடி நாயகி, மற்ற கலைஞர்கள் குறித்து எந்த தகவலும் வரவில்லை.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
