ரஜினி படத்தில் நடித்ததால் குற்ற உணர்ச்சி.. நவாஸுதீன் சித்திக் அதிர்ச்சி பேட்டி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து இருந்த படம் பேட்ட. அதில் வில்லனாக நவாஸுதீன் சித்திக் நடித்து இருப்பார்.
அந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்திய பேட்டியில் கூறிய நவாஸுதீன் சித்திக், அந்த படத்திற்காக சம்பளம் வாங்கியது எனக்கு குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தியது என கூறி இருக்கிறார்.
குற்றவுணர்ச்சி
"ரஜினி சார் உடன் பேட்ட படத்தில் நடித்தபோது, ஷூட்டிங் முடிந்ததும் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. நான் என்ன செய்தேன் என எனக்கே தெரியவில்லை. அவர்கள் வசனத்தை prompting செய்தார்கள், நான் லிப் sync மட்டுமே செய்தேன். எது என்ன என எனக்கே புரியவில்லை. என் performance ரொம்ப weak ஆக இருந்தது."
"தற்போது தெலுங்கில் அறிமுகம் ஆகும் சைந்தவ் படத்தில் அப்படி நடக்க கூடாது என்பதற்காக நான் ஒவ்வொரு வசனத்தையும் அதன் அர்த்தத்தையும் தெறித்துக்கொண்டேன். நானே தான் டப்பிங் பேசினேன். அதானால் இதில் குற்ற உணர்ச்சி குறைந்தது" என நவாஸுதீன் சித்திக் பேட்டி கொடுத்திருக்கிறார்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
