முகத்தை மறைத்து லோக்கல் ரயிலில் சென்ற ரஜினி பட வில்லன்! வைரல் வீடியோ
ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் ஆனார்.
நவாஸுதீன் சித்திக்
நவாஸுதீன் சித்திக் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் பங்கேற்றபோது பல டாப் ஹீரோக்கள் பற்றி விமர்சித்து பேசினார். ஓடிடி தளங்களில் முதலில் நல்ல நடிகர்களை வைத்து எடுத்தார்கள், ஆனால் அதன் பின் முன்னணி ஹீரோக்கள் இதில் வந்தார்கள். அவர்கள் நடிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும்.
"அவர்கள் திரைப்படங்களில் நடிப்பது போலவே இதிலும் நடிக்கிறார்கள், ஓடிடிகாக அவர்கள் நடிப்பின் standardஐ உயர்த்த வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.

லோக்கல் ரயிலில் சென்ற வீடியோ
இந்நிலையில் இன்று நவாஸுதீன் சித்திக் தனது காரை விட்டுவிட்டு லோக்கல் ரயிலில் சென்று இருக்கிறார். மாஸ்க் மற்றும் கூலிங் க்ளாஸ் அணிந்து அவர் சென்றதால் அவரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
.@Nawazuddin_S ditches the car and cabs and takes a local to reach the work faster. How cool is that!#nawazuddinsiddiqui #mumbailocal #actor pic.twitter.com/JSYqx4GEYv
— ETimes (@etimes) March 28, 2022